Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான கவனத்திற்கு ..வட்டி விகிதம் திடீரென உயர்வு

கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான கவனத்திற்கு ..வட்டி விகிதம் திடீரென உயர்வு

By: vaithegi Mon, 04 Sept 2023 12:36:12 PM

கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான கவனத்திற்கு ..வட்டி விகிதம் திடீரென உயர்வு

இந்தியா: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் பண வீக்கத்தை பொறுத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றம் செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குறிப்பிட சில வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணிசமாக அதிகரித்தியுள்ளது.

அதாவது, வட்டி வீதத்தை உயர்ந்தது கார் கடன், கல்வி கடன், தனிநபர் மற்றும் வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி பண வீக்கம் காரணமாக MCLR விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.

interest rate,customer ,வட்டி விகிதம் ,வாடிக்கையாளர்

மேலும், இப்புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஐசிஐசிஐ வங்கியில் MCLR விகிதம் 8.40 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 மாத MCLR 8.50 சதவீதமாகவும், 3 மாத MCLR 8.85% ஆகவும், 1 வருடத்திற்கு 8.95 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதே போன்று, பஞ்சாப் நேஷனல் வங்கியில் MCLR விகிதம் 8.15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 மாத MCLR 8.25 சதவீதமாகவும், 3 மாத MCLR 8.35 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டி உள்ளது.

Tags :