Advertisement

ரஷியாவில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்வு

By: vaithegi Sat, 03 Sept 2022 5:10:33 PM

ரஷியாவில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்வு

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனாவல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகஉயர்வு .. ரஷியாவில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை அடுத்து அங்கு இன்று இரண்டாவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில், ரஷியா முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 9 க்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,russia ,கொரோனா ,ரஷியா

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் நாடு முழுவதும் பரவியதால் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கானப்படுகிறது.இதையடுத்து கொரோனா தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்றாகும்.

மேலும் அங்கு தடுப்பூசி எடுப்பது மெதுவாக நடைபெற்று கொண்டு வருகிறது. மேலும், கடந்த 2020 க்கு பிறகு ஊரடங்கு விதிக்க அந்த நாட்டு அரசு தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|