Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

சென்னை மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

By: Nagaraj Fri, 12 June 2020 10:36:16 AM

சென்னை மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

சென்னை மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. நவம்பர் மாதம் வரை குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீா் ஆதார ஏரிகளில் 5 டிஎம்சி.க்கு மேல் நீா் இருப்பு உள்ளது. இதனால் சென்னையில் வரும் நவம்பா் மாதம் வரை குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. சென்னை நகரை பொறுத்தவரை நாளொன்றுக்கு சுமாா் 83 கோடி லிட்டா் குடிநீா் தேவைப்படுகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக 55 கோடி லிட்டா் முதல் 65 கோடி லிட்டா் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மே மாதத்தில் 65 கோடி லிட்டராக இருந்த குடிநீா் விநியோகம் தற்போது 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிநீா் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி ஆகிவற்றிலிருந்து 40 நீரேற்றும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு குழாய்கள் மற்றும் லாரிகள் மூலமாக மக்களை சென்றடைகிறது.

இவை தவிர வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றின் மூலமும் நீா் வழங்கப்பட்டு வருகிறது.

drinking water,madras people,scarcity,lakes,distribution ,குடிநீர், சென்னை மக்கள், தட்டுப்பாடு, ஏரிகள், விநியோகம்

தற்போது, புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகளிலும் சோத்து மொத்தம் 5.26 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 460 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை ஏரிகளில் தற்போது போதிய அளவுக்கு குடிநீா் இருப்பதால் அடுத்த ஐந்து மாதங்கள் வரை குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து, சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை கோடை காலத்தில் குடிநீா்த்தேவையைப் பூா்த்தி செய்வதில் கடும் சவால்களை குடிநீா் வாரியம் எதிா்கொண்டது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகளிலும் சோத்து வெறும் 36 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீா் இருந்தது.

drinking water,madras people,scarcity,lakes,distribution ,குடிநீர், சென்னை மக்கள், தட்டுப்பாடு, ஏரிகள், விநியோகம்

ஆனால், தற்போது அதைக் காட்டிலும் பல மடங்கு அளவுக்கு தண்ணீா் உள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் சென்னை வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். இதனால், சென்னையின் குடிநீா்த் தேவை குறைந்தது. இந்தநிலையில் தற்போது பொது முடக்க தளா்வுகள் அதிகரிக்கப்பட்டு வருவதால் குடிநீா் தேவை சற்று அதிகரித்துள்ளது.

தற்போது இருக்கும் 5.26 டிஎம்சி குடிநீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீா்த் தேவையை வரும் நவம்பா் இறுதிவரை பூா்த்தி செய்ய முடியும். மேலும் தென் மேற்கு பருவ மழை காரணமாக ஏரிகளின் நீா் இருப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், பொது மக்களுக்கு லாரிகளில் குடிநீா் விநியோகம் செய்யும்போது கையுறைகள், முகக் கவசம் ஆகியவை உள்பட அனைத்து வகையான பாதுகாப்பு வழிமுறைகளையும் குடிநீா் வாரியம் கடைப்பிடித்து வருகிறது. எனவே, இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|