Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிறுவனத்தின் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின் விளைவாகவே நேற்று வாட்ஸ் அப்பில் சில மணி நேர முடக்கம்

நிறுவனத்தின் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின் விளைவாகவே நேற்று வாட்ஸ் அப்பில் சில மணி நேர முடக்கம்

By: vaithegi Wed, 26 Oct 2022 12:46:34 PM

நிறுவனத்தின் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின் விளைவாகவே நேற்று வாட்ஸ் அப்பில் சில மணி நேர முடக்கம்

இந்தியா: நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் .... உலகின் நம்பர் 1 தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் செயலி நேற்று 2 மணி நேரமாக முடங்கியது. அதனால் பயனர்களால் எந்த வித செய்திகளையும் பகிர முடியவில்லை. அதே போ ன்று வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை டவுன்லோட் செய்ய முடியவில்லை.

எனவே இதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் மிகவும் குழம்பினர். இதையடுத்து பிற சமூக வலைத்தளங்களில் #whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது. இது பற்றி மெட்டா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது வாட்ஸ் அப் செயலியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக தெரிவித்தது.

whatsapp,technology , வாட்ஸ் அப்,தொழில்நுட்பம்

இதையடுத்து அது போலவே இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பழையப்படி வாட்ஸ் அப் செயல்பட தொடங்கியது. அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் செயலி முடங்கியது.

மேலும் நிறுவனத்தின் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின் விளைவாகவே வாட்ஸ் அப்பில் சில மணி நேர முடக்கம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். தற்போது இப்பிரச்சனை முழுவதுமாக சரி செய்யப்பட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் இது போல நடக்காது எனவும் வாட்ஸ் அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :