Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் சுதந்திர தினத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 27 உயிரிழப்பு

அமெரிக்காவில் சுதந்திர தினத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 27 உயிரிழப்பு

By: Karunakaran Mon, 06 July 2020 09:58:37 AM

அமெரிக்காவில் சுதந்திர தினத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 27 உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜூலை 4-ஆம் தேதி அன்று 244-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.இந்த சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

வார விடுமுறை நாள் என்பதால் கேளிக்கை விடுதிகளிலும், இரவு விடுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

united states,independence day,shootings,27 casualties ,அமெரிக்கா, சுதந்திர தினம், துப்பாக்கிச் சூடு, 27 பேர் உயிரிழப்பு

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சிகாகோ மாகாணத்தில் மட்டும் 63 பேர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் அங்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்கில் 41 துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடைபெற்றதில், 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட போதும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மொத்தம் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :