Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கா வழங்கி ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் கொழும்பிற்கு புறப்பட்டது

அமெரிக்கா வழங்கி ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் கொழும்பிற்கு புறப்பட்டது

By: Nagaraj Wed, 07 Sept 2022 08:19:12 AM

அமெரிக்கா வழங்கி ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் கொழும்பிற்கு புறப்பட்டது

இலங்கை: ஆழ்கடல் ஊடுருவல் கப்பல்... அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் அமெரிக்காவின் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் துறையால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட இந்தக் கப்பல், கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலானது வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் 115மீ நீளம் கொண்டது. அதிகபட்ச வேகம் 29 கடல் மைல்களாகும். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

identity,friendship,sri lanka,navy,maritime challenges,travel ,அடையாளம், நட்புறவு, இலங்கை, கடற்படை, கடல்சார் சவால்கள், பயணம்

உத்தியோகபூர்வ கப்பலை பொறுப்பேற்றதும், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு சாதனங்கள் மற்றும் உபகரணங்களுடன் சில நவீனமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் சியாட்டிலில் இருந்து கொழும்பு வருகையின் போது, ஹவாய், மற்றும் ஹொனலுலுவில் துறைமுகங்களுக்கும் இது பயணம் மேற்கொள்ளும். பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சாங்கி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளது.

கடலில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க இரு நாடுகளின் கூட்டை வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில் முந்தைய சந்தர்ப்பங்களில் அமெரிக்க கடலோர காவல்படையிலிருந்து SLN சமுதுரா (P 621) மற்றும் கஜபாஹு (P 626) கடல் ரோந்து கப்பல்களை இலங்கை கடற்படை பெற்றது. P 627 வின் அன்பளிப்பானது அத்தகைய நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான அடையாளமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|