போதைப் பொருள் பாக்கெட்டை தூக்கி வீசும் யானை வீடியோ வைரல்
By: Nagaraj Mon, 28 Aug 2023 11:16:24 AM
சீனா: போதை பொருளை தூக்கி எறியும் யானை… சீனாவில் காட்டு யானை ஒன்று போதைப் பொருள் அடங்கிய பையை தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
யுனான் மாகாணத்தில் மெங்மேன் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் 4 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன.
அப்போது மற்றோரிடத்திற்குச் செல்லும் போது கடைசியாக வந்த யானை கீழே கிடந்த பை ஒன்றை நுகர்ந்து பார்த்தது. அதன் வாசனை வேறாக இருந்ததால் அந்தப் பையைத் தூக்கி வீசியது.
இதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பையைத் திறந்து பார்த்தபோது அதனுள் சில உடுப்புகளும், பிளாஸ்டிக் தாளில் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருந்த 2 கிலோ 800 கிராம் எடைகொண்ட ஒப்பியம் போதைப் பொருள் இருந்ததையும் கண்டறிந்தனர்.
வனப்பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தும் கும்பல் இந்தப் பையை விட்டுச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.