Advertisement

ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்தது

By: vaithegi Fri, 07 July 2023 09:47:22 AM

ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சலும், வரத்தும் அதிகரிக்கும் போது தக்காளியின் விலை குறைந்து காணப்படும். தக்காளியின் விளைச்சல் , வரத்து குறையும் போது தக்காளி விலை உச்சத்தை பெறுகிறது.

இதனை அடுத்து கடந்த சில தினங்களாகவே வெளிமாநிலங்களிலிருந்து வர வேண்டிய தக்காளி வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதன் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ₹40 இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது 150 ரூபாயை எட்டியது.

tomato price,cultivation , தக்காளி விலை ,சாகுபடி


மேலும் தொடர் மழையின் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்தது. வரத்து குறைந்ததன் காரணமாக விலை உச்சத்தை அடைந்தது. இதனால் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பண்ணை பசுமை கடைகளிலும், நியாய விலை கடைகளிலும் தக்காளியை விற்பனை செய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்தது 80 மற்றும் 90 ரூபாய்க்கு தற்போது தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 1 வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags :