Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூரில் ஒருவாரம் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூரில் ஒருவாரம் முழு ஊரடங்கு

By: Nagaraj Sun, 12 July 2020 6:06:20 PM

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூரில் ஒருவாரம் முழு ஊரடங்கு

பெங்களூரில் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பித்து அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடியூரப்பா.

பெங்களூரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததையடுத்து வரும் 14ம் தேதி இரவு 8 மணி தொடங்கி ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணி வரை ஒருவார கால முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் நகர்ப்புற பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெங்களூரில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

full curfew,one week,bangalore,corona,increase ,முழு ஊரடங்கு, ஒரு வாரம், பெங்களூர், கொரோனா, அதிகரிப்பு

கர்நாடகத்தில் மொத்தம் பாதிப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பால், மளிகை, காய்கறி மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவிதத் தளர்வுகளுமற்ற முழு ஊரடங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|