காலில் ஏற்பட்ட சூட்டு காயத்தால் அவதியடைந்து வந்த காட்டு யானை இறந்தது
By: Nagaraj Tue, 28 Feb 2023 3:34:40 PM
கொழும்பு: காட்டு யானை இறந்தது... மட்டக்களப்பு செங்கலடி – கொம்மாதுறை தீவுப் பகுதியில் கடந்த 20 நாட்களாக காலில் ஏற்பட்ட சூட்டு காயம் காரணமாக வீழ்ந்து கிடந்த காட்டு யானை சிசிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை தீவுப் பகுதியில் காட்டு யானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட சூட்டு காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து தன்னுடைய உணவுத் தேவைக்காக மீளவும் எழ முடியாமல் தவித்துக்கொண்டு உயிருக்கு போராடி வந்தது.
அம்பாறை மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் குழாமினர் காயப்பட்ட காட்டு யானைக்கு முறையான சிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
20நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பராமரித்து உணவளித்து வந்த நிலையில், குறித்த யானையானது நேற்று உயிரிழந்துள்ளது.