Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6பி’ படிவத்தை நிரப்பி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்

6பி’ படிவத்தை நிரப்பி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்

By: vaithegi Fri, 26 Aug 2022 1:43:09 PM

6பி’ படிவத்தை நிரப்பி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்

இந்தியா ; நாட்டில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆதார் எண்ணை இணைக்க ‘6பி’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

இதை அடுத்து இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை என்விஎஸ்பி போர்ட்டல் என்ற இணையதளத்திற்கு வாக்காளர் சேவை எண் மூலமாக இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் வாக்காளர் பதிவு அலுவலர் வீடு வீடாக சென்று ‘6பி’ படிவத்தை வழங்கி வருகின்றனர்.

இப்படிவத்தை நிரப்பியும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

voter card,aadhaar no ,வாக்காளர் அட்டை, ஆதார் எண்

இந்த படிவத்துடன் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுவதோடு வீட்டில் இருக்கும் அனைவரது செல்போன் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

எனவே இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியிருப்பதாவது, வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் ‘6பி’ படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார். ஆதார், வாக்காளர் அட்டை போன்ற எந்தவிதமான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

Tags :