Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 சதவீத போனஸ் ஏற்புடையதல்ல என்கிறார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

10 சதவீத போனஸ் ஏற்புடையதல்ல என்கிறார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

By: Nagaraj Sat, 15 Oct 2022 10:12:48 PM

10 சதவீத போனஸ் ஏற்புடையதல்ல என்கிறார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

சென்னை : தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஏற்புடையதல்ல என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் 3.5 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

10 percent,announced,diwali bonus,public sector ,10 சதவீத தீபாவளி போனஸ், ஊழியர்களுக்கு, தமிழக அரசின், பொதுத்துறை

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.

இந்த ஆண்டு திமுக அரசு இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடலில் பேனாவை வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :