பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கைது
By: Nagaraj Thu, 05 Oct 2023 4:03:45 PM
புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கைது... டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயினைத் தொடர்ந்து மூன்றாவதாக ஆம் ஆத்மி எம்பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறையினர் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்தனர்.
நேற்று காலை முதல் சஞ்சய்சிங்கின் வீட்டை சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்து மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரது வீட்டின்முன் திரண்டனர். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் சஞ்சய் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம் ஆத்மி நேர்மையான ஊழலற்ற கட்சி என்றும், ஆனால் மதுபான முறைகேடு தொடர்பான வழக்கில் தமது கட்சியினர் வீடுகளில் ஆயிரம் முறை சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.