Advertisement

ஆவின் பால் விற்பனை ஓராண்டில் 7% உயர்வு

By: vaithegi Thu, 31 Aug 2023 1:16:27 PM

ஆவின் பால் விற்பனை ஓராண்டில் 7% உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்து உள்ளனர்.

மேலும் ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவையும் ஆறிமுகப்படுத்தப்பட்டது.

cows milk,sale , ஆவின் பால் ,விற்பனை


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆவின் பால் தினசரி விற்பனையானது 7 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 16.1 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது .

இதையடுத்து தினசரி விற்பனை அதிகரித்தாலும் பால் கொள்முதல் 24 சதவீதம் குறைந்து உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது. கொள்முதல் நடவடிக்கையை தீவிர படுத்த மாவட்ட தொழிற்சங்கங்களுக்கு ஆவின் உத்தரவிட்டு உள்ளது.

Tags :