Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவின் டிலைட் பால் டிச.1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் ..ஆவின் நிர்வாகம் தெரிவிப்பு

ஆவின் டிலைட் பால் டிச.1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் ..ஆவின் நிர்வாகம் தெரிவிப்பு

By: vaithegi Tue, 28 Nov 2023 2:57:08 PM

ஆவின் டிலைட் பால் டிச.1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும்  ..ஆவின் நிர்வாகம் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து உள்ள ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் , இதற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஊதா நிற டிலைட் பால் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , ஆவின் நிறுவனத்தின் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது ,வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

avin management,milk card,avin delight ,ஆவின் நிர்வாகம் ,பால் அட்டை ,ஆவின் டிலைட்

இதையடுத்து இந்நடவடிக்கைகள் எதுவும் லாப நோக்கியோ அல்லது வியாபாரம் யுத்தியாகவோ கையாளப்படவில்லை . பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மக்கள் விரும்பும் ஆவின் டிலைட் பால் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்படவுள்ளது. அரை லிட்டர் ஆவின் விலை பால் ரூபாய் 21 விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Tags :