Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக அதிகரித்து வரும் வெப்ப அலையால் சுமார் 100 பேர் வரை உயிரிழப்பு

மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக அதிகரித்து வரும் வெப்ப அலையால் சுமார் 100 பேர் வரை உயிரிழப்பு

By: vaithegi Fri, 30 June 2023 4:24:44 PM

மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக அதிகரித்து வரும் வெப்ப அலையால் சுமார் 100 பேர் வரை உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோவில் கொளுத்தும் வெயிலால் ஜூன் மாதம் 100 பேர் உயிரிழப்பு ....

ஜூன் மாதம் மெக்சிகோவில் மிகவும் கடுமையான வெப்பநிலை காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த கொளுத்தும் வெயிலில் அந்நாட்டு மக்கள் தத்தளித்து கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) ஆக அதிகரித்துள்ளதாக மெக்சிகோ சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

casualty,mexico ,உயிரிழப்பு ,மெக்சிகோ

மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெப்பம் காரணமாக ஒரு உயிரிழப்பு மட்டுமே பதிவான நிலையில், தற்போது 100 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை அடுத்து இந்த இறப்புக்கான முதன்மைக் காரணமாக வெப்பப் பக்கவாதம் கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து நீரிழப்பு என்றும் கூறப்படுகிறது.

Tags :