Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனவரில் சென்னை மெட்ரோ ரயிலில் சுமார் 66 லட்சம் பேர் பயணம்

ஜனவரில் சென்னை மெட்ரோ ரயிலில் சுமார் 66 லட்சம் பேர் பயணம்

By: vaithegi Wed, 01 Feb 2023 6:12:53 PM

ஜனவரில்  சென்னை மெட்ரோ ரயிலில் சுமார் 66 லட்சம் பேர் பயணம்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளதாவது, 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இது குறிபற்றி மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்தாண்டில் 01.01.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

metro rail corporation,travel ,மெட்ரோ ரயில் நிறுவனம்,பயணம்

அதனைத்தொடர்ந்து 2023, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,96,536 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,54,733 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

மேலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :