Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு .... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு .... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By: vaithegi Sat, 25 Nov 2023 1:34:26 PM

தற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு   .... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, இந்திய வரலாற்றிலேயே வடகிழக்கு பருவமழைக்காக 20,000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. மருத்துவ முகாம்களால் ஒவ்வொரு வாரமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைகிறார்கள்.

மழை நீரை கண்டால் மக்கள் அஞ்சும் நிலை மாறி, இன்று மகிழ்ச்சி கொண்டு அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மழை நீர் வடிகால். தமிழகத்தில் தினசரி 40 முதல் 50 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்படைந்து உள்ளனர்.மதுரையில் ஒரே நாளில் எட்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

minister m. subramanian,dengue ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,டெங்கு

மாவட்ட முழுவதும் கடந்த 30 நாட்களில் 120க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இனி வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு குறையும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளது.

மேலும் கால் மரத்துப் போவதால் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு தலைவலி , கால் வலி நிறைய இருந்தது. ஒவ்வொரு துறை மருத்துவர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவ குழு முடிவு எடுக்கும் என அவர் கூறினார்.

Tags :