Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

By: Karunakaran Sun, 23 Aug 2020 6:43:25 PM

அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

சமீபத்தில் அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இத்தகைய ஒப்பந்தம் காரணமாக உலகில் அரபுக்கள் மீதான மதிப்பும், மரியாதையும் உயர்ந்து உள்ளது. ஏனெனில், இது அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும்.

இந்த நடவடிக்கை மூலம் இஸ்லாத்துக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அமீரகம், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

abu dhabi,crown prince,sheikh mohammed bin zayed al nahyan,nobel prize ,அபுதாபி, கிரீடம் இளவரசர், ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், நோபல் பரிசு

இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயரை உலகின் மிக உயர்ந்த பரிசான நோபல் அமைதிப் பரிசு கிடைப்பதற்காக பரிந்துரை செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் இமாம்கள் பேரவை தலைவர் ஹசன் அல் சல்கூமி கூறியுள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், இது அவருக்கு மிகவும் தகுதியான ஒரு பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் பணிகளை செய்து வருகின்றன. இந்த பரிசு அபுதாபி பட்டத்து இளவரசருக்கு கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :