Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணம் உயர்த்தப்பட்டது: அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணம் உயர்த்தப்பட்டது: அரசாணை வெளியீடு

By: Nagaraj Mon, 24 July 2023 8:40:15 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணம் உயர்த்தப்பட்டது: அரசாணை வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

accident,disability,government of tamil nadu,ordinance,relief, ,அரசாணை, தமிழக அரசு, நிவாரணம், மாற்றுத்திறனாளிகல், விபத்து

கை, கால், பார்வை இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கான வருடாந்திர உதவித்தொகையை உயர்த்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகள்களுக்கான ஆண்டு கல்வி உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதியில் படிக்கும் மகன் மற்றும் மகளுக்கு இழப்பீடு தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags :
|