Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் டிசம்பருக்குள் 31 மில்லியன் பயனர்கள் 5ஜி போன் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப் படுவார்கள் ஒரு சர்வேயின் முடிவு

நாட்டில் டிசம்பருக்குள் 31 மில்லியன் பயனர்கள் 5ஜி போன் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப் படுவார்கள் ஒரு சர்வேயின் முடிவு

By: vaithegi Thu, 05 Oct 2023 1:02:23 PM

நாட்டில்  டிசம்பருக்குள்  31 மில்லியன் பயனர்கள் 5ஜி போன் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப் படுவார்கள்  ஒரு சர்வேயின் முடிவு

இந்தியா : 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் 5G சேவைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.இதையடுத்து தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய 2 நிறுவனங்களும் 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுவீடிஷ் தொலைத்தொடர்பு நிறுவனம் எரிக்சனின் நுகர்வோர் ஆய்வகத்தின் குளோபல் சர்வே கடந்த செவ்வாய் அன்று இந்தியாவில் 5G பயனர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தி இதன் முடிவுகளை வெளியிட்டது.

5g,users ,5ஜி ,பயனர்கள்

எனவே அதன்படி இந்தியாவில் 5G பயனர்களின் தற்போதைய எண்ணிக்கை 80 முதல் 100 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் 31 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனர்கள் டிசம்பர் இறுதிக்குள் 5G ஃபோன்களுக்கு மேம்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, தென்கொரியா, சீனா மற்றும் பிற நாடுகளில் 5ஜி சந்தைகளில் உள்ள பயனர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சராசரியாக 5ஜி பயனர்கள் வாரத்திற்கு 2 மணி நேரம் அதிகமாக இச்சேவையை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 5G சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியாவின் வேக செயல் திறன் 3.59 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|