Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

By: vaithegi Sun, 09 Apr 2023 6:46:52 PM

2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

இந்தியா: இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன .... இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் பொன் விழா ஆண்டு கர்நாடகாவில் உள்ள மைசூரில் இன்று நடந்தது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

இதையடுத்து அதில் பிரதமர் மோடி பேசியதாவது, “ இந்தியாவில் 2006 -ஆம் ஆண்டு 1,411 புலிகள் இருந்தன. 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1706 புலிகள் இருந்தன. 2018ன் கணக்கெடுப்பின்படி 2,967 ஆக உயர்ந்தது . 2018 -ஆம் ஆண்டு 2,967 புல்லிகள் இருந்த நிலையில் தற்போது 2002- ஆம் ஆண்டின் கணக்கின் படி 3,167 புலிகள் உள்ளன” என அவர் பேசினார்.

tigers,india,prime minister modi ,புலிகள் ,இந்தியா,பிரதமர் மோடி

மேலும், அடுத்த 25 ஆண்டுகளில் புலிகளைப் பாதுகாப்பதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கும் ‘Amrit Kaal Ka Tiger Vision' என்ற சிறு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

நமது நாட்டில் உள்ள புலிகளை ‘வங்காளப் புலி’ அல்லது `ராயல் பெங்கால் புலி’ என்று அழைக்கிறோம். இந்த வங்காள புலியின் எண்ணிக்கை உலகளவில் கிட்டதட்ட 4,500 இருக்கும் என கூறப்படுகிறது.

Tags :
|
|