Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிப்பு

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிப்பு

By: vaithegi Thu, 06 Oct 2022 5:25:43 PM

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிப்பு

சென்னை: டெங்கு பாதிப்பு உயர்வு ... தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதுசெய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 481 ஆக இருந்த டெங்கு பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் திடீரென உயர்ந்து 572 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

dengue,department of health ,டெங்கு ,சுகாதாரத்துறை

இதை அடுத்து பருவமழை காலகட்டத்தில் இது மிக தீவிரமாக பரவும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்துதல்,, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் ஆகிய பல்வேறு அறிவுறுத்தல்கள் சுகாதாரத்துறையால் வழங்கப்பட்டு உள்ளது என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|