Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.89 பேர் லட்சம்விண்ணப்பத்துள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.89 பேர் லட்சம்விண்ணப்பத்துள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவிப்பு

By: vaithegi Tue, 19 July 2022 12:27:21 PM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.89 பேர் லட்சம்விண்ணப்பத்துள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து உயர்கல்வி படிப்பில் சேர மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

இதை அடுத்து என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

department of higher education,government arts and science colleges ,உயர்கல்வித் துறை,அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்

மேலும் அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :