Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

By: vaithegi Thu, 05 Jan 2023 10:27:27 AM

சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

சீனா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இதையடுத்து சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.64 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 666,496,945 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,703,461 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 638,428,555 பேர் மீண்டனர் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,364,929 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,world ,கொரோனா ,உலகம்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 102,962,787 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,120,038 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 99,739,328 ஆகும்.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,680,402 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,707 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,145,854 ஆகும்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,370,289 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 162,500 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 38,583,146 ஆகும்.


Tags :
|