Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Thu, 28 Sept 2023 4:40:30 PM

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 6 நாட்கள் மழை கொட்டித் தீர்க்குமாம் .. தமிழகத்தில் கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் இன்று (செப்.28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயிருக்கிற

meteorological centre,rainfall ,வானிலை ஆய்வு மையம்,மழை

அதே போன்று வருகிற செப். 29 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற செப். 30 முதல் அக். 04 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் செப். 28 முதல் அக். 02 வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :