Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் தகவல்

By: vaithegi Mon, 02 Oct 2023 1:23:36 PM

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு  .. வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 2) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகிற அக். 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையடுத்து சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

weather station,rain ,வானிலை மையம்,மழை

அக்.1-ம் தேதி காலை (நேற்று) 8.30மணியுடன் நிறைவடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழைஅளவுகளின் டி திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 11செ.மீ., நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 10 செ.மீ.,கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு,

மேலும் திருநெல்வேலி மாவட்டம்நாலுமுக்கு ஆகிய இடங்களில்தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலைஆய்வுமைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Tags :