Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Tue, 28 June 2022 8:43:40 PM

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழகம்: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படியாகத் தான் இருந்து வருகிறது. தமிழகத்தில் தினமும் 25,000 பேருக்கு மேல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

சென்னையில் மட்டுமே தற்போதைக்கு 136 பேர் கொரோனா சிகிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களில் 51 பேர் அரசு மருத்துவமனையிலும், 85 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona,experiment ,கொரோனா ,பரிசோதனை

தமிழகத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். இதற்கு எந்தவிதமான விதிவிலக்கும் அறிவிக்கப்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வகையில் நாளை மயிலாப்பூர் லஸ் கார்னரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த விழிப்புணர்வு முகாமில் முதற்கட்டமாக கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசம் வழங்க உள்ளனர். மேலும், 4000-க்கும் மேற்பட்டவர்களுக்கு எம்.ஆர்.பி மூலமாக பணி நியமனம் வழங்கவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கொரோனா தீவிரமாக பரவுவதை கூட கருத்தில் கொள்ளாமல், அந்த காலகட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags :
|