Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவிப்பு

நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவிப்பு

By: vaithegi Mon, 18 July 2022 10:27:50 AM

நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவிப்பு

புதுடெல்லி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

இதை அடுத்து தமிழகத்தில் இத்தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். மாணவர்கள் நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் வந்த யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

neet,entrance exam ,நீட்,நுழைவுத்தேர்வு

பின் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாகவும் 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags :
|