Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி .. உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி .. உலக சுகாதார அமைப்பு

By: vaithegi Tue, 08 Nov 2022 10:19:17 AM

ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி  ..   உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பா: கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி ... ஐரோப்பிய நாடுகளில் நடப்பு ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தாவல் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஜெர்மனி நாட்டில் அதிக அளவாக 4 ஆயிரத்து 500 பேர், ஸ்பெயின் நாட்டில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். இங்கிலாந்தில் 3,200 பேரும், போர்ச்சுகல்லில் ஆயிரத்திற்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

world health organization,europe,hot summer ,உலக சுகாதார அமைப்பு ,ஐரோப்பா, கடும் கோடை

இருப்பினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என அவர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார். ஏனெனில், இன்னும் பல நாடுகள் வெப்ப பாதிப்பிற்கு கூடுதலான மக்கள் உயிரிழந்த தகவல்களை அளித்து கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு ஆண்டு 2022-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம். இதற்கு, நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தின் மத்தியில், முதலில் வெப்ப அலை தொடங்கி பின்பு, அது ஜூலை மாத மத்தியில் கடும் வெப்ப அலை பரவலானபோது அதனால் மக்களில் பலர் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :
|