Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

By: vaithegi Sat, 21 Jan 2023 12:47:04 PM

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு  தகவல்

இந்தியா: கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகிறது ..... கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்தது. எனவே இதனை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு முதல் கட்டமாக ஊரடங்கை அறிவித்தது.

இதனால் மக்கள் மீண்டும் வீடுகளில் முடங்கினர். அதே நேரம் மற்ற நாடுகளில் தொற்று வெகுவாக பரவ ஆரம்பித்தது.இதனை கருத்தில் கொண்டு கனடா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

world health organization,corona , உலக சுகாதார அமைப்பு,கொரோனா


இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒரு மாத காலமாக உலக அளவில் கொரோனாவால் 20% மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி பேர் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 15-ந் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி சுமார் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பரிதமாக உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Tags :