Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போராட்டத்திற்கு பின் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு குவியும் பரிசுகள்

போராட்டத்திற்கு பின் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு குவியும் பரிசுகள்

By: Karunakaran Mon, 08 June 2020 11:03:59 AM

போராட்டத்திற்கு பின் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு குவியும் பரிசுகள்

அமெரிக்காவில் கடந்த மாதம் 25-ம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் சிக்கி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்படுகின்றன. போராட்டகாரர்கள் காலி பாட்டில்கள், பதாகைகளை போலீசார் மீது வீசுகின்றனர். இதனால் சாலைகள் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.

united states,protestors,new york,antonio quinn jr ,அமெரிக்கா,போராட்டக்காரர்கள்,நியூயார்க்,அன்டோனியோ க்வின் ஜூனியர்

இந்நிலையில், நியூயார்க்கின் பப்பலோ நகரை சேர்ந்த 18 வயதான அன்டோனியோ க்வின் ஜூனியர் என்ற இளைஞர் துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் பைகளை கொண்டுவந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார். கடந்த 1-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு துவங்கி சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து சுத்தம் செய்தார்.

அவரது பெயரும், பொறுப்புணர்வும் குறித்த செய்திகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட பின், அவருக்கு உதவி செய்ய பலர் முன் வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மாட் பிளாக் என்பவர் தனது சிவப்பு நிற முஸ்டாக் காரை க்வினுக்கு பரிசாக அளித்துள்ளார். மேலும், தொழிலதிபர் ஒருவர் அவருக்கு ஒரு வருடத்திற்கு இலவச காப்பீட்டு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பப்பலோ நகரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகம் அவருக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

Tags :