Advertisement

ராமர் கோவில் கட்ட குவிந்து வரும் நன்கொடை

By: Karunakaran Wed, 29 July 2020 2:51:38 PM

ராமர் கோவில் கட்ட குவிந்து வரும் நன்கொடை

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளைக்கு பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கவுள்ளது.

ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு முதலாவது வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவில் கட்டுமான பணிக்கு ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடிவரை தேவைப்படும் என முதல்கட்டமாக மதிப்பிட்டுள்ளன. இருப்பினும், கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டால், கட்டுமான செலவும் அதிகரிக்கும்.

ram temple,donations,ayodhya,devotees ,ராம் கோயில், நன்கொடைகள், அயோத்தி, பக்தர்கள்

கடந்த 1992-ம் டிசம்பர் 6-ந் தேதி ராமஜென்மபூமி இடத்தில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையை பக்தர்கள் வழிபட்டு கடந்த பிப்ரவரி மாதம்வரை, காணிக்கை செலுத்தியதில், ரூ.11 கோடி நிரந்தர வைப்புநிதியில் போடப்பட்டுள்ளது. மேலும் அப்போது பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புக்கு உள்ளன.

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நகை வியாபாரி, தனது மகன் பெயரில் ஒரு கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். உத்தரபிரதேச தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம், சமீபத்தில் ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு 34 கிலோ வெள்ளியை நன்கொடையாக வழங்கி உள்ளது. இதுவரை ரொக்கமாக ரூ.22 கோடியும், ஏராளமான தங்கமும், வெள்ளி செங்கற்களும் நன்கொடையாக குவிந்திருப்பதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :