Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர் தூண்டி விடும் உயர் மட்ட வகுப்ப சேர்ந்தவர்கள் என குற்றச்சாட்டு

போர் தூண்டி விடும் உயர் மட்ட வகுப்ப சேர்ந்தவர்கள் என குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 12 Oct 2022 10:42:28 PM

போர் தூண்டி விடும் உயர் மட்ட வகுப்ப சேர்ந்தவர்கள் என குற்றச்சாட்டு

அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் 'போர் தூண்டி விடும் உயர் மட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்' என்று துளசி கபார்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இந்நிலையில், தற்போது துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் 'போர் தூண்டி விடும் உயர் மட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனத்துடன் இணைத்து, தங்களுக்குள் சண்டையிட்டு, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறார்கள் என்றும் துளசி கூறியுள்ளார். மற்ற ஜனநாயகக் கட்சியினரும் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜோ பிடனும் அவரது அரசாங்கமும் நம்மை அணு ஆயுதப் போரை நோக்கித் தள்ளிவிடுவதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார்.

tulsi gabbard,nuclear war,impeachment,people,division ,
துளசி கப்பார்ட், அணு ஆயுத போர், குற்றச்சாட்டு, மக்கள், பிளவுப்படுத்தல்

சுதந்திர எண்ணம் கொண்ட ஜனநாயகக் கட்சியினர் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று துளசி கப்பார்ட் கூறினார். துளசி, 'நான் இனி ஜனநாயகக் கட்சியில் இருக்க முடியாது. இந்தக் கட்சி இப்போது ஒரு உயர மட்ட வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மக்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனவாதமாக்கி மக்களை பிளவுபடுத்த வேலை செய்கிறார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டுகிறார்கள்.

அதிபர் ஜோ பிடன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் உயரடுக்கு பிரிவினர், நம்மை அணுஆயுதப் போரின் பிடியில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது. மூன்றாம் உலகப் போர் நடந்தால் உலகம் அழிந்துவிடும் என துளசி கப்பார்ட் கூறினார்.

Tags :
|