முழுமையாக கட்டணம் கட்ட வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
By: Nagaraj Thu, 03 Sept 2020 5:07:04 PM
நடவடிக்கை எடுக்கப்படும்... 100 சதவிகித பள்ளி கட்டணம் செலுத்தக் கூறி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீதான புகார்களை பெற பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை தெரிவிக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் முழு கல்வி கட்டணம் செலுத்த சொல்லி நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சரியாக செயல்படவில்லை என்று நீதிமன்றம் விமர்சித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், கல்விக்கட்டணம் தொடர்பான வழக்கு வருகின்ற 7-ம் தேதி
விசாரனைக்கு வர உள்ளதால் கல்விக்கட்டணம் தொடர்பாக பெற்றோர்கள் புகார்
அளிக்க ஏதுவாக புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றை ஏற்படுத்தி அதனை மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் பெறோர்களுக்கு தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தனியார் பள்ளிகள் மீது
பெற்றோர்கள் அளிக்கும் புகார்களை நாளைக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்
சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனர் தெரிவித்துள்ளார்.