Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்சிக்கு எதிரான நடவடிக்கை... காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்

கட்சிக்கு எதிரான நடவடிக்கை... காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்

By: Nagaraj Tue, 14 Feb 2023 9:53:18 PM

கட்சிக்கு எதிரான நடவடிக்கை... காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்

ஜார்க்கண்ட்: பணி இடை நீக்கம்... ஜார்க்கண்டில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநில தலைமை நிர்வாகத்திற்கு எதிரான செயல்கள், கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக மாநில பொதுச் செயலாளர்கள் உட்பட அதன் முக்கிய தலைவர்கள் நான்கு பேர் 6 ஆண்டுகளுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஒழுங்குமுறைக் குழு இந்த இடைநீக்கம் தொடர்பாக , ஜார்கண்ட் முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அலோக் துபே, ராஜேஷ் குப்தா, சாது சரண் கோப், அனில் ஓஜா, ராகேஷ் திவாரி, சுனில் குமார் சிங் மற்றும் லால் கிஷோர் நாத் ஷாதேவ் ஆகியோருக்கு அறிவித்திருந்தது.

action,anti-party,explanation,report,leaders ,நடவடிக்கை, கட்சி விரோதம், விளக்கம், அறிக்கை, தலைவர்கள்

இதையடுத்து ஜார்கண்ட் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறைக் குழு, கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அலோக் துபே, டாக்டர் ராஜேஷ் குப்தா, சாது சரண் கோப் மற்றும் லால் கிஷோர் நாத் ஷாதேவ் ஆகியோரின் பெயரை மாநில தலைமைக்கு பரிந்துரை செய்தது.

காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறைக் குழுவின் தலைவர் பிரிஜேந்திர பிரசாத் சிங் கூறுகையில், “கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், மாநிலத் தலைவருக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டதற்காகவும் கட்சி அதன் தலைவர்கள் ஏழு பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்ததாகவும், அதில் 3 பேர் விளக்கம் அளித்ததாகவும்” கூறினார்.

அதில் பொதுச் செயலாளர் அனில் ஓஜா, ராகேஷ் திவாரியின் விளக்கம் திருப்தி அடைந்ததாகவும், மற்றவர்களின் விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Tags :
|
|