Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பான் அரசின் அதிரடி அறிவிப்பு... குழந்தை பெற்றெடுத்தால் லட்சக்கணக்கில் பரிசு

ஜப்பான் அரசின் அதிரடி அறிவிப்பு... குழந்தை பெற்றெடுத்தால் லட்சக்கணக்கில் பரிசு

By: Nagaraj Wed, 14 Dec 2022 09:13:19 AM

ஜப்பான் அரசின் அதிரடி அறிவிப்பு... குழந்தை பெற்றெடுத்தால் லட்சக்கணக்கில் பரிசு

ஜப்பான்: தனது குடிமக்கள் குழந்தையைப் பெற்றெடுக்க ஊக்குவிக்கும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதாலும், சில காலமாக குறைந்து வரும் பிறப்பு விகிதத்தாலும் கலக்கமடைந்துள்ளது. ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள், மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. தற்போது, குழந்தை பிறக்கும் போது, பெற்றோருக்கு, 4,20,000 யென் (ரூ.2,53,338) வழங்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கையை 500,000 யென்களாக (ரூ.3,00,402) அதிகரிக்க சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கட்சுனோபு கட்டோ விரும்புகிறார். அவர் கடந்த வாரம் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதித்தார், இது 2023 நிதியாண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு, 'பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மொத்த தொகை மானியம்' என்று அளித்து வரும் போதிலும், ஜப்பானில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை.

japan,low numbers,money,government,plan ,ஜப்பான், குறைந்த எண்ணிக்கை, பணம், அரசு, திட்டம்

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விலைவாசி உயர்வு. ஜப்பானில் பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், குழந்தை பிறப்பின் போது ஆகும் செலவின் தேசிய சராசரி 4,73000 யென்கள் ஆகும்.

குழந்தை பிறப்பின் போது ஏற்படும் செலவு தொகையை ஈடு கட்டும் வகையில் மானியத்தை அதிகப்படுத்தினாலும், குழந்தையை வளர்ப்பதற்கும் ஆகும் செலவும் மிகவும் அதிகமாக உள்ளது. ஜப்பான் அரசின் இந்த உதவித் தொகையினால், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு சராசரியாக 30,000 யென்கள் கையில் இருக்கும். ஒட்டுமொத்தமாக, புதிய பெற்றோர்கள் தங்கள் குடும்பம் வளரும்போது கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.

மேலும், 80,000 யென் அதிகரிப்பு என்பது இதுவரை இல்லாத அதிகபட்ச மானியமாக இருக்கும். 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஜப்பானில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளன.

Tags :
|
|