Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கை; பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு

ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கை; பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு

By: Nagaraj Wed, 02 Sept 2020 10:39:30 AM

ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கை; பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு

பேஸ் புக் நிறுவனம் அறிவிப்பு... உள்ளூர் ஊடகங்களின் செய்திகளுக்கு சமூக வலைத்தளங்கள் ராயல்டி பணம் செலுத்த வேண்டும் எனும் ஆஸ்திரேலிய அரசின் மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், தங்கள் தளங்களில் ஆஸ்திரேலியா மக்கள் செய்திகளைப் பகிரும் வசதியை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசு பொது மக்களிடம் பதினெட்டு மாதங்களாகக் கருத்துகளைக் கேட்டும் இணையதளங்களை உன்னிப்பாகக் கவனித்தும் புதிய இணையதள சீர்திருத்த மசோதாவை அமுல்படுத்தியுள்ளது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், இனி சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி அடிப்படையில் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பயனர்களுக்கு ராயல்டி செலுத்துவதற்குப் பதிலாக, ஆஸ்திரேலிய பயனர்கள் தம் பேஸ்புக் கணக்குகளில் செய்திகளைப் பகிர்வதைத் தடுக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் கூகுள் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

facebook company,australia,news,royalty ,பேஸ்புக் நிறுவனம், ஆஸ்திரேலியா, செய்திகள், ராயல்டி

இந்தப் புதிய இணையதள சீர்திருத்தம் குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய அரசின் பொருளாளரான ஜோஷ் ப்ரைதென்பெர்க் "நிலையான ஊடக சூழலை நாங்கள் விரும்புகிறோம். அதனால் இந்த இணையதள சீர்திருத்தத்தை உருவாக்கியுள்ளோம். இந்த சட்டம் உள்ளூர் ஊடகத் துறையைச் சேர்ந்த உண்மைச் செய்தியாளருக்குப் பணம் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

பேஸ்புக்கின் நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் ராட் சிம்ஸ், “பேஸ்புக் நிறுவனம் தவறான நேரத்தில் தவறான முடிவெடுத்துள்ளது. இந்த சீர்திருத்தம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனங்களுக்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கும் இடையே நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்” என்று தெரிவித்தார்.

கடந்த மாதமே கூகுள் நிறுவனம் தனது முதன்மையான தேடல் பக்கத்தில் பாப் அப் செய்து ஒரு விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. அதில், கூகுள் நிறுவனத்தின் இலவச சேவை ஆபத்தில் உள்ளதாகவும், செய்தி நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் கூகுளின் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் பகிரவேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|