Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; முதல்வர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; முதல்வர் எச்சரிக்கை

By: Nagaraj Sun, 02 Aug 2020 5:30:30 PM

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; முதல்வர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டது என புகார் கொடுக்கப்பட்டது.

surcharge,appropriate action,government determination,action ,கூடுதல் கட்டணம், உரிய நடவடிக்கை, அரசு நிர்ணயம், நடவடிக்கை

இதைத்தொடர்ந்து, அங்கு ஆய்வு செய்தபோது மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த தனியார் மருத்துவமனை அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக முதல்வர் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில், தனியார் மருத்துவமனையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரங்கள் தெளிவாக பொதுமக்கள் பார்வையில் வைக்கப்பட வேண்டும் எனவும் தனியார் மருத்துமனையில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் வசூலிப்பதாக புகார் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags :