Advertisement

மத்திய தொழிலக பாதகாப்பு படை எடுத்துள்ள அதிரடி முடிவு

By: Nagaraj Thu, 15 Dec 2022 11:23:38 PM

மத்திய தொழிலக பாதகாப்பு படை எடுத்துள்ள அதிரடி முடிவு

புதுடில்லி: இனி விமான நிலையங்களில் நெரிசல் இருக்காது. எப்படி என்று தெரியுங்களா. மத்திய தொழிலக பாதுகாப்பு படை எடுத்தள்ள அதிரடி முடிவுதான் இது.


மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் வருகின்றனர்.

இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டங்களை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் கூட்டு நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

report,flight,reconciliation,experiments,flight ,அறிக்கை, விமானம், சமரசம், பரிசோதனைகள், விமானம்

இதனையடுத்து டெல்லி, மும்பை சர்வதேச விமான நிலையங்கள் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்பட உள்ளது. இந்த பணியில் 100 ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்படுவதாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, “சர்வதேச விமான நிலையங்களில் திறக்கப்படும் கூடுதல் கவுன்ட்டர்களுக்கு அதிக அளவில் ஊழியர்கள் நியமிக்க உள்ளோம்.

அதேபோல் நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களிலும் இது நடைமுறைக்கு வரும். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடியும் வரை இந்த நடவடிக்கை தொடரும். ஆனால் இதற்காக வழக்கமான பரிசோதனைகளோ, பாதுகாப்பு நடவடிக்கைகளிலோ எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்” என கூறியுள்ளா

Tags :
|
|