Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து குழு ஆராய்ந்து நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து குழு ஆராய்ந்து நடவடிக்கை

By: Nagaraj Fri, 18 Sept 2020 6:02:55 PM

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து குழு ஆராய்ந்து நடவடிக்கை

குழு ஆராய்ந்து நடவடிக்கை... அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் ஒருவர் அதுதொடர்பில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், வாழ்க்கைச் செலவு வெகுவாக அதிகரித்துச் செல்லும் நிலையில் தேங்காய் ஒன்று 100 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் 160 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

minister,government,projects,inflation,cost of living ,அமைச்சர், அரசாங்கம், திட்டங்கள், விலை உயர்வு, வாழக்கைச்செலவு

இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து செல்கின்றமை மக்களுக்கு பெரும் வாழ்க்கை சுமையாகியுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு அது தொடர்பில் ஏதேனும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.அத்துடன் தேசிய உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags :