Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கினியாவில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை மீட்க தூதரம் வாயிலாக நடவடிக்கை

கினியாவில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை மீட்க தூதரம் வாயிலாக நடவடிக்கை

By: Nagaraj Mon, 07 Nov 2022 12:13:42 PM

கினியாவில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை மீட்க தூதரம் வாயிலாக நடவடிக்கை

கினியா: சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மாலுமிகளை மீட்க தூதரகம் வாயிலாக கினியா நாட்டுடன் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது.

அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர். நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது. அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது.

indian sailors,action,guinea,capture,oil tanker ,இந்திய மாலுமிகள், நடவடிக்கை, கினியா, சிறைபிடிப்பு, எண்ணெய் கப்பல்

இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர். அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர்.


இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர். நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|