Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை

By: Nagaraj Sat, 25 June 2022 09:46:02 AM

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை

ஐரோப்பா: உக்ரைன் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் 121ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றனர்.

உக்ரைன் நாடு நேட்டோ உடன் இணைய கூடாது என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த போர் எப்பொழுது முடியும் என்பது தெரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் நாடு வேட்பாளர் அந்தஸ்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

eu,ukraine,support,nato,information ,ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன், ஆதரவு, நேட்டோ, தகவல்

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் நாட்டிற்கு தனது ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. இதனால் தற்போது உக்ரைன் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு ரஷியாவின் ரியாசன் மாகாணத்தில் இலியுஷின் Il-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. அப்போது இந்த விபத்தில் 9 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கையில் இறந்து போனார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள ஐந்து பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விமானம் ஆயுதம் கொண்டு செல்ல பயன்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|