பறவை காய்ச்சல் கட்டுப்பாடுகளில் சிலவற்றை நீக்க நடவடிக்கை
By: Nagaraj Thu, 20 Apr 2023 11:55:37 PM
பிரிட்டன்: கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை... பறவைக் காய்ச்சல் பரவியமை காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மூடப்பட்ட பண்ணைகள் தவிர்த்து திறந்த வெளிகளில் கோழிகள் இடும் முட்டைகளை கொண்டு செல்வதை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.
குறித்த முட்டைகளை பாதுகாப்பான நடைமுறைகளுடன் வெளியே பொது இடங்களில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பறவைக் காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த தடைகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :
decision |
action |