Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் கடை ஊழியர்களை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை

டாஸ்மாக் கடை ஊழியர்களை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை

By: Monisha Thu, 10 Sept 2020 2:34:46 PM

டாஸ்மாக் கடை ஊழியர்களை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை

ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5,500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சுமார் 26 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சூப்பர்வைசர், விற்பனையாளர் என்ற பொறுப்புகளில் கடைகளை நிர்வகித்து வருகின்றனர். இவர்களில் பலர் ஒரே கடையில் பல வருடங்கள் பணியாற்றி வருகிறார்கள்.

1 லட்சத்துக்குள் மது விற்பனையாகும் கடைகள், 2 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகும் கடைகள் மற்றும் 4 லட்சத்திற்கு மேல் விற்பனையாகும் கடைகள் என வருவாய் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் 3 வகையாக பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து ஊழியர்கள் ஒரே கடையில் 5, 10 வருடங்களாக பணியாற்றி வருவதால், ஒரு சிலருக்கு பாதிப்பும், பலருக்கு ஊக்கத் தொகையும் கிடைக்கிறது.

tasmac store,staff,transfer,incentive,tamil nadu ,டாஸ்மாக் கடை,ஊழியர்கள்,இடமாற்றம்,ஊக்கத் தொகை,தமிழ்நாடு

குறைந்த வருவாய் உள்ள கடைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்கள் குறைந்த அளவே வருவாய் ஈட்டுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கம் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தது.

அதன் அடிப்படையில் ஊழியர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஒவ்வொரு கடைகளிலும் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மாவட்டம் வாரியாக இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

Tags :
|