Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்கள் புகார் தெரிவித்த டாஸ்மாக் கடைகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்கள் புகார் தெரிவித்த டாஸ்மாக் கடைகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்

By: vaithegi Sat, 24 June 2023 6:09:28 PM

பொதுமக்கள் புகார் தெரிவித்த டாஸ்மாக் கடைகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்


சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஈரோட்டில் நடைபெறும் சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாமில் பங்கேற்ற அமைச்சர் சு.முத்துசாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாட்டில் தற்போது 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதையடுத்து இதற்கான முடிவு கடந்த ஏப்ரல் மாதமே எடுக்கப்பட்டது. விற்பனை குறைந்த கடைகள் மட்டுமே மூடப்பட்டதாக கூறுவது என்பது தவறு.

பொதுமக்கள் புகார் தெரிவித்த மதுபானக்கடைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம், அதன் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடை ஊழியர்கள் மிக குறுகிய இடத்திலிருந்து சிரமத்துடன் பணியாற்றி கொண்டு வருகின்றனர்.

tasmac shops,general public ,டாஸ்மாக் கடைகள்,பொதுமக்கள்

தொழிற்சங்கத்தினருடன் பேசி உள்ளோம். குறைபாடுகளை களையவும், ஒன்றிரண்டு இடங்களில் நடக்கும் தவறுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். 100 சதவீதம் ஒழுங்குப்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.

இதனை அடுத்து அண்மையில் தமிழ்நாட்டில் 500 மதுபானக்கடைகளை தமிழக அரசு மூடியது. விற்பனை குறைவாக நடைபெறும் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.

Tags :