Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால் நடவடிக்கை... ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால் நடவடிக்கை... ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

By: Nagaraj Sat, 15 Apr 2023 6:21:55 PM

பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால் நடவடிக்கை... ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடக தேர்தலுக்கு இன்றைக்குள் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக, ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, ஆளும் கட்சியான பாஜக கடந்த 11ஆம் தேதி 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, 23 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.

alert,bjp,candidate list,jagadish shetter,procedure, ,எச்சரிக்கை, ஜெகதீஷ் ஷெட்டர், நடவடிக்கை, பாஜக, வேட்பாளர், பட்டியல்

இந்த இரு கட்டப் பட்டியலில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்எல்ஏக்களாக உள்ள பலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரையும் போட்டியிட வேண்டாம் என பா.ஜ., கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், போட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ள ஜெகதீஷ் ஷெட்டர், இன்றுக்குள் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வெளியிடாவிட்டால் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரித்துள்ளார்.

Tags :
|
|