Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகை திவ்யா வீட்டிற்கு வழக்கறிஞர்களோடு சென்ற நடிகர் அர்னவ்

நடிகை திவ்யா வீட்டிற்கு வழக்கறிஞர்களோடு சென்ற நடிகர் அர்னவ்

By: Nagaraj Tue, 13 June 2023 11:54:13 PM

நடிகை திவ்யா வீட்டிற்கு வழக்கறிஞர்களோடு சென்ற நடிகர் அர்னவ்

சென்னை: நடிகர் அர்னவ் சில வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யா வீட்டிற்கு சென்றார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்னவ், சக நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டு, கர்ப்பிணி திவ்யாவை அடித்து உதைத்ததாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அர்னவ் மாங்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அர்னவ் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் திவ்யாவுக்கு குழந்தை பிறந்தது. இன்று நடிகர் அர்னவ் சில வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யா வீட்டிற்கு சென்றார்.

actor,actress,arnav,divya,lawyers, ,அர்ணவ், திவ்யா, நடிகர், நடிகை, வக்கீல்கள்

நடிகை திவ்யா அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அர்னவ் தரப்பில், அந்த வீடு தனது பெயரில் இருப்பதாகவும், தற்போது திவ்யா அதில் அத்துமீறி நுழைந்து வசித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதே சமயம் அர்ணவ் நிபந்தனை ஜாமீனில் இருக்கும் போது இந்த வீட்டிற்கு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவ்யா தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறும், தங்கள் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் போலீசார் அறிவுறுத்திச் சென்றனர். இதன் காரணமாக நடிகை திவ்யா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
|
|
|