Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..

By: Monisha Fri, 15 July 2022 7:43:17 PM

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..

திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(69) சென்னையில் தனது வீட்டில் காலமானார்.மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன் நடித்த பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் , மூடு பனி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டன. இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக பிரதாப் போத்தன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

actor,pratap bothan,passed,mourns ,நடிகர், பிரதாப் போத்தன் ,கண்ணீர் அஞ்சலி,உடல்,

பிரதாப் போத்தனின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. மிகச் சிறந்த சினிமா படைப்பாளியை இழந்து விட்டதாக சினிமா பிரபலங்கள் வருத்தத்துடன் இறப்பு செய்தியை பதிவிட்டு வருகின்றனர். கடந்தாண்டு வெளியான கமலி ப்ரம் நடுக்காவேரி படத்தில் பிரதாப் போத்தன் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.

Tags :
|
|