Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்

முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்

By: Nagaraj Wed, 01 Mar 2023 11:53:42 AM

முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாடுகிறார். தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

happy birthday. video viral,dear friend,rajinikanth ,பிறந்த நாள், வாழ்த்து. வீடியோ வைரல், இனிய நண்பர், ரஜினிகாந்த்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றின் வாயிலாக தனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில், 'வணக்கம்! என்னுடைய இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Tags :